Tuesday 29 September 2015

உழவுத் தொழில் காப்போம்

இது எனது சொந்தப்படைப்பு.  இதற்கு முன் வெளியாக வில்லை. வேறெங்கும் வெளியிடவில்லை.வலைபதிவர் திருவிழா மற்றும் தமிழ் இணையம் நடத்தும் போட்டிக்காக எழுதப்பட்டது

உழவுத் தொழில் காப்போம்
********************************

உழுதுண்டு வாழ்வார்
எனப்போற்றினார் திருவள்ளுவர்
ஆனால் இன்று
உழுதவர் அழுதவர் ஆகின்றார்
நிலங்கள் நிறமற்றுக் கிடக்கின்றன
வயல்கள் தம் வாசம் இழந்ததோடு
வாசம் இழந்து போயின
காங்கீரிட் காடுகளாய் வீடுகள் முளைத்து
விளை நிலங்கள் வீண் நிலங்களாயின
மழை வேண்டி தவம் செய்கிறோம்
ஆனால்
மரம் நட்டு பாதுகாத்தோமா??
வினை செய்தவன்
வினையே தான் அறுப்பான்
மரத்திற்கு மரண தண்டனை கொடுக்கிறீர்கள்
அதனால்
பூமிதாய் கோபம் கொண்டு
நீர் தராமல்\வற்றினாள்
உரம் கலந்தீர்கள்
எனவே தான் ரசாயனக் கலவையோடு
விளைகின்றன பயிர்கள்
இன்னும் என்ன வேண்டும்
தன் தோற்றம் இழந்தது
பல தோட்டங்கள்
ஆனாலும்

மனிதர்கள் இன்னும்
உணரவில்லையே
இயற்கை என்றும் நமக்கு
இறைமை தரும்
இறைமை என்றும்
வளமை தரும்
வளமை மட்டுமே
வாழ்வு தரும்
வாழ்வில் உயர்வு பெறவே
 நிலம் காப்போம்
பூமி காப்போம்
மரம் வளர்ப்போம்
இயற்கை நேசிப்போம்
*************************************



ஐயா , இது எனது சொந்தப் படைப்பே தான் அய்யா> இதற்கு முன் நான் பச்சை பாலகனாக இருந்தேன் அய்யா அதனால் இதனை வெளியிட வாய்ப்பே இல்லை. மேலும் இதனை யாரும் அம்பது காசுக்குக் கூட வாங்க மாட்டாங்க அய்யா எனவே நான் யாருக்கும் தருவதில்லை என பகிரங்கமாக உறுதி மொழி தருகிறேன் அய்ய்யா...

.பரிசு நீங்கள் பணமாக, பொருளாக, என் கல்லூரியின் கட்டணமாக எப்படிக் கொடுத்தாலும் உடனே அங்கீகரித்து விடுவேன் அய்யா...ஒண்ணுமே தர இஷ்டம் இல்லைனாலும் கொஞ்சூண்டு வாழ்த்தாவது தாங்கய்யா...

.அப்புறம் உங்களுக்கு விழாக் கால சலுகையாக ( நான் பிறந்த மண் புதுக்கோட்டையில் விழா நடப்பதால் மட்டுமே உங்களுக்கு இச்சலுகை வழங்கப்படுகிறது என்பதை நீங்கள் கணக்கில் கொள்ள வேண்டும்) எனக்குத் தரும்தொகை பெரிதாக இருக்கும் பட்சத்தில் உங்களுக்கு தவணைத் திட்டத்தினையும் புதிதாக அறிமுகப் படுத்தியுள்ளேன் என்பதை மகிழ்வுடன் தெரிவித்து கொள்கிறேன்....

இச்சலுகையை அனைவரும் பயன்படுத்தி பலன் பெறுமாறு உங்களை அன்புடன் வேண்டுவது
நல்ல பிள்ளை மற்றும் அப்பாவிப் பிள்ளை சக்தி

No comments:

Post a Comment